மேட்டுப்பாளையத்தில் தீவிரமடையும் தென் மேற்கு பருவமழை..! மாலை நேரங்களில் இடைவிடாது மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் மாலை நேரங்களில் இடைவிடாது தொடர்ச்சியாக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் மாலை நேரங்களில் இடைவிடாது தொடர்ச்சியாக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியாகவும் கேரளா காடுகளை ஒட்டிய பகுதியாக உள்ளதால் இங்கு பருவமழை காலங்களில் மழைப்பொழிவு சற்று கூடுதலாக இருக்கும். 

இருப்பினும் இந்த முறை தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் துவங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் மழைப்பொழிவு என்பது முற்றிலும் இல்லாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் இந்தாண்டு மழைப்பொழிவு பொய்த்துவிடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையானது இடைவிடாது பெய்து வருகிறது. 

குறிப்பாக, மாலை நேரங்களில் பெய்ய துவங்கும் மழையானது இரண்டு முதல் நான்கு மணி நேரம் இடைவிடாது சூறாவளிக்காற்று இல்லாமல் மிதமான மழையாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும், கடந்த ஒருமாத காலமாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் பருவமழையால் வெப்பம் நீங்கி குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...