சாத்தான்குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவமும் நடைபெறாது..! காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

கோவை: சாத்தான்குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: சாத்தான்குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சாத்தான்குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவம் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கொரோனா சோதனை நேரத்தில் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என கடுமையாக காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக விசாரிக்கின்றது எனவும் மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் உயர்நீதிமன்றம் வழங்கும் உத்தரவினை இந்த அரசு அமல்படுத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...