தமிழகம்‌ முழுவதும்‌ நாளை நடைபெறும் கடையடைப்புக்கு பொள்ளாச்சி தொழில்‌ வர்த்தக சபை ஆதரவு!

கோவை: சாத்தான்குளத்தில்‌ தந்தை, மகன்‌ என இரு வியாபாரிகளின்‌ உயிரிழப்பை கண்டித்து தமிழகம்‌ முழுவதும்‌ நாளை நடைபெறும் கடையடைப்புக்கு பொள்ளாச்சி தொழில்‌ வர்த்தக சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

கோவை: சாத்தான்குளத்தில்‌ தந்தை, மகன்‌ என இரு வியாபாரிகளின்‌ உயிரிழப்பை கண்டித்து தமிழகம்‌ முழுவதும்‌ நாளை நடைபெறும் கடையடைப்புக்கு பொள்ளாச்சி தொழில்‌ வர்த்தக சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொள்ளாச்சி தொழில்‌ வர்த்தக சபை வெளியிட்டுள்ள ஆதரவு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சாத்தான்குளத்தில் தந்தை, மகன்‌ இருவரை போலீஸ்‌ காவலில்‌ வைத்திருந்த போது அவர்கள்‌ உயிர்‌ இழந்ததை அடுத்து அவர்களின்‌ ஆத்மா சாந்தியடையவும்‌, அஞ்சலி செலுத்தும்‌ வகையிலும் அவர்களின்‌ உயிரிழப்புக்கு நீதி கேட்கும்‌ வகையிலும்‌ தமிழகம்‌ முழுவதும் கடையடைப்பு நாளை 26.6.2020 வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடையடைப்பிற்கு பொள்ளாச்சி தொழில்‌ வர்த்தக சபை மற்றும்‌ சார்பு சங்கங்களும்‌ தனது ஆதரவை தெரிவித்து, நமது பகுதி வியாபாரிகளின் ஒத்துழைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்‌ உயிர்நீத்த வியாபாரிகள்‌ ஜெயராஜ் மற்றும்‌ பொன்னீஸ்‌ ஆகியோரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...