கோவை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் என இரு வியாபாரிகளின் உயிரிழப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கடையடைப்புக்கு பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை வெளியிட்டுள்ள ஆதரவு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரை போலீஸ் காவலில் வைத்திருந்த போது அவர்கள் உயிர் இழந்ததை அடுத்து அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கேட்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நாளை 26.6.2020 வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடையடைப்பிற்கு பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் சார்பு சங்கங்களும் தனது ஆதரவை தெரிவித்து, நமது பகுதி வியாபாரிகளின் ஒத்துழைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் உயிர்நீத்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பொன்னீஸ் ஆகியோரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.