கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் மனமுடைந்த கணவன் வீட்டின் முன் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் மனமுடைந்த கணவன் வீட்டின் முன் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் மனமுடைந்த கணவன் வீட்டின் முன் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சோமையம்பாளையம் பகுதி ராமசாமி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ரகுபதி (21). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சம்பள பணம் முழுவதும் மது அருந்தியே செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது மனைவி தனது உறவினர் ஈம காரியத்திற்கு பணம் கேட்டு உள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறிய ரகுபதி மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கணவனை காணவில்லை என தேடிய மனைவி தன் கணவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவரது தாய் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்விற்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...