நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் போக்குவரத்து, பொதுமக்கள் தேவையில்லாமல் நடமாட்டம் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 36 நாட்களாக பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாத சூழ்நிலையில் இன்று ஒரே நாளில் 15 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பணிக்காக சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ள சுப்ரியா சாகு மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் பேசுகையில், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் தொற்று அதிகரித்து வருவது கண்டறியப்படுகிறது. எனவே, போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நாளை நடைபெறும் முதல்வருடனான கூட்டத்திற்குப் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.