கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி..! கோவையில் பொது முடக்கம் தேவையில்லை - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கோவையில் பொது முடக்கம் தேவையில்லை என்று ஆட்டோ ஒலிபரப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கோவையில் பொது முடக்கம் தேவையில்லை என்று ஆட்டோ ஒலிபரப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.



கோவையில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாவட்டம் முழுவதும் 400 ஆட்டோக்களை பயன்படுத்தி இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்த அவர், சமீப நாட்களில் கோவையில் கொரோனா தொற்று அதிகரிக்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் மூலமாகவே தொற்று ஏற்படுவதாக தெரிவித்தார். 

மேலும், கோவைக்கு வந்தவர்கள் 17 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறிய அவர், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் அறிவிப்பை மீறி வெளியே வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் நாள்தோறும் 2000 பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல கோவை மாவட்டத்திற்கு பொது முடக்கம் தேவையில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

மேலும், கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...