நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குறிப்பாக, மளிகை பொருட்கள், பழக்கடைகள், கறிக் கடைகள் துணிக்கடகள் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றது.
இரவு இப்பகுதியில் அங்கு தூங்கும் சிலர், இன்று விடிகாலை கடைகளில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டு கடை உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து மார்கெட் பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே,15 ற்கும் மேற்பட்ட கடைகள் குடோன்கள் எரிந்து நாசமாகின. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொழுந்துவிட்டு எரிந்த தீயில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின, என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர்,.மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.