"சாப்பிட்டால் தானே சார், உயிர் வாழ முடியும்", தள்ளு வண்டி கடை நடத்தும் பெண் மற்றும் மகனுடன் போலீசார் வாக்குவாதம்..! வைரல் ஆன வீடியோ

கோவை: கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளு வண்டியில் இரவு நேர டிபன் கடை நடத்தி வருபவர் வேலுமயில்.இவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் இரவு 8 மணிக்கு மேல் தள்ளு வண்டியில் டிபன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.


கோவை: கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளு வண்டியில் இரவு நேர டிபன் கடை நடத்தி வருபவர் வேலுமயில்.இவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் இரவு 8 மணிக்கு மேல் தள்ளு வண்டியில் டிபன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அங்கு ரோந்து பணியில் இருந்த இரத்தினபுரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லமணி கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடையை திறக்ககூடாது எனவும் உடனடியாக மூடும்படி அறிவுறுத்தினார்.

கடையை மூடினால், அவர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும், கடந்த மூன்று மாதங்களாக வாடகை கொடுக்க முடியாத நிலையில் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்து வருவதாக கூறி வேலுமயிலின் மனைவி போலீசாரிடம் கூறினார்.

ஆனால், கடையை உடனடியாக மூடும்படி போலீசார் தொடர்ந்து கூறியதை அடுத்து பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தனது பெற்றோரை ஒருமையில் காவல்துறையினர் பேசியதை மொபைலில் படம் பிடித்துள்ளார். இதனை கண்ட காவல்துறையினர் வேலுமயிலின் மகனின் அலைபேசியை பறிக்க முயன்றனர்.

இதனையடுத்து காவலர்களின் இரு சக்கர வாகனத்தின் சாவியை வேலுமயிலின் மகன் பிடிங்கியதை அடுத்து காவலர்கள் அவரை பிடிக்க முயன்றனர். மேலும், செல்லமணியுடன் உடன் இருந்த காவலர்கள் அவரை லத்தியால் தாக்கியதை வேலுமயில் மற்றும் அவரது மனைவி தடுத்து தன் மகன் பள்ளி மாணவன் அவனது செயலை மன்னித்து விடுமாறு கெஞ்சினர்.

மேலும்,bசிறுவனின் தாய் சாலையில் அமர்ந்து கொண்டு அருகில் உள்ளவர்களிடம் தனக்கு உதவுமாறு கதறி அழுதார். இந்த பாச போராட்டம் காரணமாக அவ்வழியே செல்பவர்கள் நின்று வேடிக்கை பார்த்தவர்களை போலீசார் அப்புறபடுத்த முயன்றனர்.

இதனை தொடர்ந்து மகனின் செயலுக்கு எங்கு வேண்டுமானாலும் வந்து மன்னிப்பு கேட்க தயார் என பெற்றோர்கள் கூறினர். இதனை தொடர்ந்து தனது மகனுடன் போலீஸ் வாகனத்தில் ஏற முயன்ற தாயை தடுத்து நிறுத்திய போலீசார் மாணவனை வண்டியில் ஏற்றினர். 

இதனை படம் எடுத்த மற்றொரு நபரின் அலைபேசியயை பிடுங்கிய காவல் உதவி ஆய்வாளர் செல்லமணி, அந்த நபர் அலைபேசியை தருமாறு கேட்டபோது அவரை திட்டியதுடன் அவரை அடித்து அலைபேசியை தர மறுத்து எடுத்து சென்று விட்டார். 

இதையடுத்து, காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்ட சிறுவனை இரத்தினபுரி காவல் நிலையம் அழைத்து சென்று பின்னர் மாணவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து மாணவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளனர். 

அவர்கள் மாணவன் சராசரியாக படிக்க கூடியவர் எனவும் பெற்றோர் மீது அதிகப் பாசம் கொண்டவர் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் எதிர்காலம் கருதி சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அவரிடம் மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். 

மேலும், பள்ளி மாணவனின் தந்தை வேலுமயில் மீது பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துவதாக ( IPC 75) சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, பின்னர் விடுவித்தனர்.

பள்ளி சிறுவன் மற்றும் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...