கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள தமிழக விவசாயிகள் கேரளாவில் உள்ள அட்டப்பாடி, சோலையூர் கோட்டத்துறை ஆகிய கிராமங்களில் விவசாயம் செய்து வருகின்றன.

குறிப்பாக, தென்னை, வாழை, மக்காச்சோளம், திணை வகைகள் காய்கறி போன்றவற்றை பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாததிற்க்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலாக்கப்பட்ட நிலையில், மாநில எல்லைக மூடப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இ-பாஸ் இல்லாமல் யாரும் மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் தடாகம் போன்ற கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் கேரளாவில் உள்ள அவர்களது நிலத்திற்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கேரள எல்லைக்குள் சென்று விவசாயம் செய்து வர அனுமதி ஏற்பாடு செய்து தர வேண்டி ஜாதி மத அரசியல் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஜாதி மத அரசியல் சார்பற்ற விவசாயிகள் சங்க மகளிர் அணி, மாநில இணை செயலாளர் மகாலட்சுமி கூறுகையில்:-
தங்களது விவசாய நிலம் கேரள எல்லைக்குள் இருப்பதால் அங்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் அங்கு பயிரிட்டுள்ள பயிர்கள் காய்கறிகள் போன்றவை வீணாவதாக தெரிவித்தார்.
மேலும், அரசு விதிமுறைகளை பின்பற்றி அங்கு சென்று விவசாயம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தக்க அனுமதி பெற்று தர வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.