கொரோனா அச்சுறுத்தலால் காந்திபுரத்தில் நான்கு வீதிகளுக்கு சீல்..!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்படும் பகுதிகள் மாநகராட்சி உதவியுடன் தகர சீட்டுகள் மூலம் மக்கள் நடமாட்டத்தை தடுக்க அடைக்கப்பட்டு வருகிறது.

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்படும் பகுதிகள் மாநகராட்சி உதவியுடன் தகர சீட்டுகள் மூலம் மக்கள் நடமாட்டத்தை தடுக்க அடைக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஜி ஆர் டி நகைக்கடை ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காந்திபுரம் மூன்றாவது, நான்காவது மற்றும் பத்தாவது தெரு, நேரு வீதியும், தகர சீட்டுகள் மூலம் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

மேலும், இங்கு உள்ள பிரபல சென்னை மொபைல் கடை அதிபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அப்பகுதி உள்ள தெருக்கள் மூடப்பட்டுள்ளது.



அங்கு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வீதிக்குள் செல்ல தடை செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி உள்ளே யாரும் செல்ல அனுமதி இல்லை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் இருந்து கோவை வந்த 10 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அந்த சிறுவன் காந்திபுரம் நேருவீதியில் உள்ள தனியார் ஹோடலில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், அந்த சிறுவனுக்கு இன்று வைரஸ் தொற்று உறுதியானது. இதனால், நேருவீதியும் தற்போது அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...