கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - சுகாதாரத்துறையினர் தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளியூர் மற்றும் வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் பகுதியில் புதிதாக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து யாரேனும் வந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 9894181212 என்ற எண்ணில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலம் சென்று திரும்பி வந்தவர்கள் குறித்து 1077 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலக எண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...