கோவை: உடுமலை சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது என்று பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் கு.இராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றம் செய்ய தூண்டியவராக கருதப்படும் குற்றவாளி சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது நியாயமற்ற நீதிமன்ற தீர்ப்பு எனவும் தமிழக அரசு மேல் முறையீடு செய்து உரிய தண்டனை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.