கோவையில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஓரிரு நாட்களில் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தகவல்

கோவை: கோவையில் அதிகளவில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் அதிகளவில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். 

கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு, பவானி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணி குடிநீர் கோவை மாநகராட்சி வார்டுகளுக்கும், வழியோர கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக சிறுவாணியில் தற்போது நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 

மேலும் சத்தியமங்கலம் சாலையில் உள்ள ராட்சத நீர்த்தேக்க தொட்டியில் பில்லூர் குடிநீர் சேகரிக்கப்பட்டு பிரதானக்குழாய்கள் மூலம் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யும் வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆழியாறு, பவானி ஆற்றுப் படுகையில் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களில் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில பகுதிகளுக்கு சரியான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், கோவையில் பகுதியில் 4-5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 8-10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் பல்வேறு இடங்களில் கடந்த 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்த நிலையில், கோவையில் அதிகளவில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...