கோவை மாவட்ட போலீசார் அதிரடி..!. இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் நுழைய முற்பட்ட கார்கள் பறிமுதல்

கோவை மாவட்ட போலீசார் அதிரடி..!. இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் நுழைய முற்பட்ட கார்கள் பறிமுதல்


கோவை: சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்கு மண்டல காவல் துறை தலைவர், பெரியய்யா,இ.கா.ப., கோவை சரக காவல் துறை துணைத் தலைவர், கார்த்திகேயன்,இ.கா.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சுஜித்குமார், இ.கா.ப., அவர்களால் கோவை மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை6 AM முதல் 6 PM வரை கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் எஸ்.பி.அப்பரல்ஸ் அருகே அமைந்துள்ள சோதனை சாவடியில், இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் நுழைய முற்பட்ட 4 கார்கள்மற்றும் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிகப்படியான நபர்களைஏற்றி வந்த 21 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இ-பாஸ் இல்லாமல்மாவட்டத்திற்குள்வர முற்படுபவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறி அதிகப்படியான நபர்களை ஏற்றி வருவோரின் வாகனங்களும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் இது போன்ற அத்துமீறல்களை தவிர்குமாறு, கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...