கோவை மாவட்ட போலீசார் அதிரடி..!. இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் நுழைய முற்பட்ட கார்கள் பறிமுதல்
கோவை: சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு மண்டல காவல் துறை தலைவர், பெரியய்யா,இ.கா.ப., கோவை சரக காவல் துறை துணைத் தலைவர், கார்த்திகேயன்,இ.கா.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சுஜித்குமார், இ.கா.ப., அவர்களால் கோவை மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை6 AM முதல் 6 PM வரை கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் எஸ்.பி.அப்பரல்ஸ் அருகே அமைந்துள்ள சோதனை சாவடியில், இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் நுழைய முற்பட்ட 4 கார்கள்மற்றும் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிகப்படியான நபர்களைஏற்றி வந்த 21 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இ-பாஸ் இல்லாமல்மாவட்டத்திற்குள்வர முற்படுபவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறி அதிகப்படியான நபர்களை ஏற்றி வருவோரின் வாகனங்களும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் இது போன்ற அத்துமீறல்களை தவிர்குமாறு, கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.