கோவையில் வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகள் செயல்படும் - வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு!

கோவை: கோவையில் வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை: கோவையில் வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகமாக பரவி வரும் சூழலில் பாதுகாப்பு கருதி வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தொற்று அதிகரித்து வருவதால் பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கபட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பெரியகடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி, தாமஸ் வீதி, வைசியாள் வீதி, தேர்முட்டி ஆகிய பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாகவும் இவை அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரையிலே செயல்படும் என்றார். இதில் கோயமுத்தூர் மளிகை வியாபாரிகள் சங்கம், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் (கடை வீதி கிளை), கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் டிஸ்டிரிபூயுட்டர்ஸ் அசோசியேசன், சமையல் எண்ணெய் வியாபாரிகள் சங்கம், டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், வெல்ல வியாபாரிகள் சங்கம், மாவட்ட பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சங்கம் என ஏழு அமைப்பினர் இணைந்து இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் கிளை பகுதியில் உள்ள கடைகளையும் இதே கால நேரத்தை கடைபிடிப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...