நீலகிரி: நீலகிரியில் கூடலூர், சேரம்பாடி, குறிஞ்சி நகர் உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை உடைத்து அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர், சேரம்பாடி, குறிஞ்சி நகர் உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் சாலையையும் வழிமறித்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்புகளும்
சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் துரத்துகிறது.

இந்த நிலையில் குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டை யானைகள் சேதப்படுத்திய போது, அவருடைய மனைவி தவமணி மற்றும் இரண்டு குழந்தைகள் பயத்தில் கூச்சலிட்டனர்.
இதையடுத்து, அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து யானையை விரட்ட முயன்றனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி மற்றும் வனத்துறையினர் காட்டுயானையை விரட்டினர்.
தொடர்ந்து இப்பகுதி மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.