வால்பாறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரம்!

கோவை: வால்பாறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை: வால்பாறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள சீதோஷ்ன நிலை, சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை போர்த்திய தேயிலை காடுகளை ரசிக்க தமிழகம், கேரளா, கர்நாடகா பாண்டிச்சேரி மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலாவின் மூலம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைத்துத் தரக்கோரி வால்பாறை மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்த நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் பி.ஏ.பி வளாகத்தில் தாவரவியல் பூங்காவும், புதிய பேருந்து நிலையம் அருகில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். இதன் அடிப்படையில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது பற்றி கருத்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, படகு இல்லம் அமைக்கும் பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய வால்பாறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...