உதகையில் குழந்தையை பெற்ற தாயே கொன்ற வழக்கில் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி: உதகையில் கடந்த 2017ம் ஆண்டு பெற்ற குழந்தையை தாய் கொன்ற வழக்கில் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

நீலகிரி: உதகையில் கடந்த 2017ம் ஆண்டு பெற்ற குழந்தையை தாய் கொன்ற வழக்கில் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சரஸ்வதி என்ற பெண்மணி தான் பெற்ற குழந்தையையே மரக் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பெண்மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், இந்த வழக்கு உதகையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, தன் குழந்தையை மரக் கட்டையால் அடித்து கொலை செய்த தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதனை தொடர்ந்து, குழந்தையை கொலை செய்த அப்பெண்ணை காவல்துறையினர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...