ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி என்டிசி பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு!

கோவை: ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் பஞ்சாலைகளை இயக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட என்டிசி பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.


கோவை: ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் பஞ்சாலைகளை இயக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட என்டிசி பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசிற்கு சொந்தமான என்டிசி பஞ்சாலைகள் தமிழகத்தில் ஏழு ஆலைகள் இயங்கி வருகின்றது. இதில் கோவையில் மட்டும் ஐந்து பஞ்சாலைகள் உள்ளது. இதில் பலநூறு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆலைகள் இயக்கப்படவில்லை. இதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்டிசி நிர்வாகம் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்தது.



இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் என்டிசி நிர்வாகிகள், தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஊதியத்தை வழங்குவது என்றும் ஆலையை இயக்குவது குறித்து மத்திய ஜவுளித்துறைக்கு தெரியப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், எடுக்கப்பட்ட முடிவுகளை ஜூன் 15ம் தேதியை கடந்தும் மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பஞ்சாலை தொழிலாளர்கள் அனைத்து என்டிசி ஆலைகளிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் முடிவாக என்டிசி நிர்வாகத்தை சந்தித்து பேசுவது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், ஒத்துக்கொண்ட முடிவை நடைமுறைப்படுத்தாமல் என்டிசி நிர்வாகம் தொடர்ந்து பிடிவாத போக்குடன் செயல்பட்டதால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இதன் தொடர்ச்சியாக உடன்பாடு எட்டப்படும் வரையில் காட்டூரில் உள்ள என்டிசி தலைமையக வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...