கோவை: கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேர் உட்பட மேலும் சிலருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் மொத்தம் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது அதி தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள இந்த வைரஸ் தொற்றின் தாக்கம், கடந்த நாட்களாக கோவையில் அதிகரித்து வருகிறது.
இப்படி இன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த 68 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 19 வயது பெண், விருதுநகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண், கோவை ரத்தினபுரியை சேர்ந்த 74 வயது பெண், தெக்கலூரை சேர்ந்த 42 வயது ஆண் ஆகிய 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே போல், டெல்லியில் இருந்து கோவை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 60 வயது ஆண், 26 வயது ஆண், 50 வயது பெண், 5 வயது பெண் குழந்தைக்கும், டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த ஈரோட்டை சேர்ந்த 47 வயது பெண், விருதுநகரை சேர்ந்த 21 பெண், சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த 31 வயது ஆண் ஆகிய 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் கோவையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் கோவையில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.