கோவையில் 10 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று 10 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பீளமேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.
ஆனால், அதே விமானத்தில் வந்த அவரது குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மீண்டும் சிறுமிக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, சென்னையில் இருந்து கோவை வந்த பயணியிடம் தொடர்பில் இருந்த வடவள்ளி பகுதியை சேர்ந்த 39 மற்றும் 29 வயதான இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
விசாரணையில், கோவை ஒலம்பஸ் பகுதியில் வசித்து வரும் 37 வயதான பாதிக்கப்பட்ட பெண், சமீபத்தில் விழுப்புரத்தில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னையில் இருந்து சாலை மர்க்கமாக கோவை வந்த கணவரிடம் இருந்து 32 வயது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து 4 பேரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.