கோவையில் 10 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 10 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று 10 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. 

ஆனால், அதே விமானத்தில் வந்த அவரது குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மீண்டும் சிறுமிக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, சென்னையில் இருந்து கோவை வந்த பயணியிடம் தொடர்பில் இருந்த வடவள்ளி பகுதியை சேர்ந்த 39 மற்றும் 29 வயதான இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

விசாரணையில், கோவை ஒலம்பஸ் பகுதியில் வசித்து வரும் 37 வயதான பாதிக்கப்பட்ட பெண், சமீபத்தில் விழுப்புரத்தில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. 

அதேபோல, சென்னையில் இருந்து சாலை மர்க்கமாக கோவை வந்த கணவரிடம் இருந்து 32 வயது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதையடுத்து 4 பேரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...