நீலகிரி: குன்னூரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சுமார் 1200 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், உள்ளிட்ட தொகுப்பினை குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லாததால் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கு குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு தனது சொந்த செலவில் 1200 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த 50 நாட்களாக சுமார் 98 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்த செலவில் நிவாரண பொருட்கள் வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினர் இன்று குன்னூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர், டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சுமார் 1200 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், உள்ளிட்ட தொகுப்பினை 5 லாரிகள் மூலமாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.