கோவை: அரசாங்கம் தேவையான விதை, நாற்றுகளை இலவசமாக வழங்கினால் இலவச காய்கறி தன்னிறைவு தமிழகத்தை உருவாக்க முடியும் என்று கோவையில் காய்கறி பாட்டி நஞ்சம்மாள் தெரிவித்தார்.

இலவச தற்சார்பு காய்கறி கிராம செயல்பாட்டாளர் நஞ்சம்மாள் பாட்டி கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
வீட்டு காய்கறி தோட்டங்கள் அமைப்பதில் இன்னும் நாம் வெற்றி பெறவில்லை எனவும் வீட்டு காய்கறி தோட்டங்கள் நாடு முழுவதும் வெற்றி பெற அரசாங்கம் தேவையான விதை மற்றும் நாற்றுகளை இலவசமாக வழங்கிட வேண்டும், 50 குடும்பங்கள் உள்ள ஊருக்கு ஒரு யூனிட் இயற்கை எருவை வழங்கிட வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி காய்கறி தோட்டம் அமைத்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
இதனை வலியுறுத்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாகவும் நஞ்சம்மாள் மகன் பாரதி சின்னசாமி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அங்கயற்கண்ணி ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து பேசிய பாரதி சின்னசாமி கூறுகையில், ஒரு கோடியே 14 லட்சம் சுய உதவி குழுக்கள் இருப்பதாகவும் இந்த குழுக்கள் முருங்கை, எலுமிச்சை போன்றவற்றை வளர்க்க அதிக இடம் தேவைப்படாது என்றார். வீட்டில் ஒரு பகுதியில், சாலை ஓரம் என இதனை பயிரிடலாம் என தெரிவித்த அவர், 100 முதல் 200 ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் உற்பத்தி செய்தால் மாதம் 5000 வரை சேமிக்க முடியும் என்றார். இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் காய்கறி தற்சார்பு திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் பெரும்பாலான மக்கள் பயன் அடைவார்கள் எனவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 12 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ரூ.72 ஆயிரம் கோடி வரை பெற முடியும் எனவும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 4 கோடி பேர் பணியாற்றி வருவதாகவும் வீட்டு தோட்டங்கள் அமைக்கப்பட்டால் தன்னிறைவற்ற கிராமங்கள் உருவாக்க முடியும் என்றார்.
இது குறித்து நஞ்சம்மாள் பாட்டி கூறுகையில், தான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர் எனவும் பத்து வருட ஆய்வுகளுக்கு பின் தற்சார்பு காய்கறி தோட்ட திட்டத்தை அமல்படுத்தியதாக கூறிய அவர், தற்போது 30 கிராமங்களில் இது செயல்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.
மேலும், அதிக காய்கறிகள் பயிரிட்டாலும் வெற்றி கிடைப்பதில்லை, இதற்கு இடபற்றாகுறையும் ஒரு காரணம் என்றவர், தான் ஒரு நாற்றை அனைவருக்கும் தற்போது வரை இலவசமாக வழங்கி வருவதாக தெரிவித்தார். வேளாண் பல்கலை பரிந்துரை செய்யும் பயிர்கள் மட்டுமே இந்த தற்சார்பு காய்கறி திட்டத்தில் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.