மேட்டுப்பாளையத்தில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் நுழைந்து வீட்டின் சுற்றுச் சுவரை இடித்து அட்டகாசம் செய்த ஒற்றை காட்டு யானை- பொதுமக்கள் அச்சம்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் நுழைந்து வீட்டின் சுற்றுச் சுவரை இடித்து அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் நுழைந்து வீட்டின் சுற்றுச் சுவரை இடித்து அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் காட்டுயானை தொடர்ந்து கிராமங்களுக்கு அருகே உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

தேக்கம்பட்டி வனப்பகுதியில் இருந்து தாசம்பாளையம், குரும்பனூர் போன்ற பகுதிகளுக்குள் நுழையும் அந்த காட்டுயானை அங்குள்ள விவசாய பயிர்களை இரவு முழுவதும் மேய்ந்து கொண்டு, பின்னர் அதிகாலை நேரம் காட்டுக்குள் செல்வது நடந்து வருகிறது.

இது குறித்து ஊர் மக்கள் வனத்துறைக்கு அளித்த தொடர் புகாரினை தொடர்ந்து வனத்துறை அந்த யானையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக விளைநிலங்களுக்குள் மட்டுமே சென்று வந்த அந்த யானை, இன்று கிராமத்திற்குள் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து அங்கும் இங்கும் சுற்றியதுடன் வீடுகளுக்கு உள்ளும் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.



இதனிடையே, தாசம்பாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் நுழைந்த போது வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால், அந்த யானை குடியிருப்புக்குள் நுழைந்து அங்கும் இங்குமாக ஓடியது.



அப்போது ஓரு வீட்டின் சுற்று சுவரை இடித்து அதனை தாண்டி சென்றதுடன் ஊரின் மத்தியில் புதியதாக கட்டிக்கொண்டிருந்த வீட்டிக்குள் நுழைந்து உள்ளேயும் சென்றது.

இதனை கண்டு பீதியடைந்த அந்த மக்கள் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக அந்த யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், அந்த ஒற்றை ஆண் காட்டுயானைக்கு ஒரு கண்ணில் குறைபாடு உள்ளதால் அந்த யானை இவ்வாறு நடந்துகொள்வதாக தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...