கோவையில் மதுபோதையில் சாக்கடையில் விழுந்த நபர் உயிரிழப்பு!

கோவை: கோவையில் அதிக போதை காரணமாக சாக்கடையில் விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: கோவையில் அதிக போதை காரணமாக சாக்கடையில் விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை நரசிம்மநாய்க்கன் பாளையம் ஹரிஜன் காலனி பகுதியை சேர்ந்தவர் ரத்தின சிகாமணி(53). இவர் அப்பகுதி பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி அதிக அளவு மது அருந்தியவர் புதுப்பாளையம் காந்தி நகர் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் காயங்களுடன் வீட்டிற்கு சென்றவர் அங்கு மரணமடைந்தார்.

இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெ.ந.பாளையம் போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் ரத்தின சிகாமணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...