கோவையில் ஸ்மார்ட்‌ சிட்டி திட்டப்பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து மத்திய அரசின்‌ ஸ்மாட்‌ சிட்டி இயக்குநருடன் காணொலி காட்சி வாயிலாகக் கலந்தாய்வு

கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டப்பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து மத்திய அரசின்‌ ஸ்மாட்‌ சிட்டி இயக்குநர்‌ குணால்‌ குமார்‌ இ.ஆ.ப. அவர்களுடன்‌ (Kunal Kumar JAS) காணொலி காட்சி வாயிலாக இன்று கலந்தாய்வு நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டப்பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து மத்திய அரசின்‌ ஸ்மாட்‌ சிட்டி இயக்குநர்‌ குணால்‌ குமார்‌ இ.ஆ.ப. அவர்களுடன்‌ (Kunal Kumar JAS) காணொலி காட்சி வாயிலாக இன்று கலந்தாய்வு நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

கொரோனா தாக்கத்திலிருந்து கோவை மாநகராட்சி/கோவை மாவட்டம்‌ மீள்வதற்கு ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்‌ குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான உணவுப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ வீடுதோறும்‌ தடையின்றி கிடைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, வீதிதோறும்‌ கிருமிநாசினி தெளிக்கும்‌ இயந்திரங்களின்‌ மூலம்‌ மருந்து தெளிக்கப்பட்டு நகர்ப்புறங்கள்‌

தூய்மை செய்யப்பட்டது. அதனால்‌ தற்சமயம்‌ கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டு கோவை மாவட்டம்‌ பசுமை மண்டலமாக உள்ளது. மேலும்‌, COVID-19 -லிருந்து காத்துக்கொள்ள டெல்லியில்‌ உள்ள ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட குழுவின்‌ ஆலோசனைகள்‌ பயனுள்ளதாக இருந்தது.

சீர்மிகு நகர திட்டத்திற்கான மத்திய அரசு நிதியினை நேரடியாக சீர்மிகு நகர திட்ட வங்கிக்‌ கணக்குகளுக்கு அனுப்புவது குறித்தும்‌, COVID-19-ஆல்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கட்டுமானம்‌ மற்றும்‌ இதர பணிகளில்‌ ஈடுபட்டு வந்த வெளி மாநில/மாவட்ட தொழிலாளர்கள்‌ தத்தம்‌ சொந்த மாநில /மாவட்டங்களுக்கு சென்று விட்டதால்‌ பணிகளை குறித்த காலக்கெடுவிற்குள்‌ செய்து முடிக்க இயலாததால்‌ பணிகளுக்கு காலநீட்டிப்பு வழங்குவது குறித்தும்‌ ஆலோசிக்கப்பட்டது.

கோவையின்‌ பரபரப்பான வீதிகளில்‌ நடைபாதைகள்‌ அமைக்க ஜெர்மன்‌ ஆலோசனைக்‌ குழுவால்‌ (GIZ) தெரிவிக்கப்பட்ட புதுமையான கருத்துருக்கள்‌ பொதுமக்கள்‌ வரவேற்பை பெற்றது எனவும்‌, மேலும்‌, கோவையில்‌ மோட்டார்‌ அல்லாத வாகனப்‌ பயன்பாட்டினை செயல்படுத்துவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...