கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப. அவர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசின் ஸ்மாட் சிட்டி இயக்குநர் குணால் குமார் இ.ஆ.ப. அவர்களுடன் (Kunal Kumar JAS) காணொலி காட்சி வாயிலாக இன்று கலந்தாய்வு நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப. அவர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசின் ஸ்மாட் சிட்டி இயக்குநர் குணால் குமார் இ.ஆ.ப. அவர்களுடன் (Kunal Kumar JAS) காணொலி காட்சி வாயிலாக இன்று கலந்தாய்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கொரோனா தாக்கத்திலிருந்து கோவை மாநகராட்சி/கோவை மாவட்டம் மீள்வதற்கு ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வீடுதோறும் தடையின்றி கிடைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வீதிதோறும் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்களின் மூலம் மருந்து தெளிக்கப்பட்டு நகர்ப்புறங்கள்
தூய்மை செய்யப்பட்டது. அதனால் தற்சமயம் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டு கோவை மாவட்டம் பசுமை மண்டலமாக உள்ளது. மேலும், COVID-19 -லிருந்து காத்துக்கொள்ள டெல்லியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட குழுவின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தது.
சீர்மிகு நகர திட்டத்திற்கான மத்திய அரசு நிதியினை நேரடியாக சீர்மிகு நகர திட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்புவது குறித்தும், COVID-19-ஆல் சீர்மிகு நகர திட்டத்தின் கட்டுமானம் மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டு வந்த வெளி மாநில/மாவட்ட தொழிலாளர்கள் தத்தம் சொந்த மாநில /மாவட்டங்களுக்கு சென்று விட்டதால் பணிகளை குறித்த காலக்கெடுவிற்குள் செய்து முடிக்க இயலாததால் பணிகளுக்கு காலநீட்டிப்பு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கோவையின் பரபரப்பான வீதிகளில் நடைபாதைகள் அமைக்க ஜெர்மன் ஆலோசனைக் குழுவால் (GIZ) தெரிவிக்கப்பட்ட புதுமையான கருத்துருக்கள் பொதுமக்கள் வரவேற்பை பெற்றது எனவும், மேலும், கோவையில் மோட்டார் அல்லாத வாகனப் பயன்பாட்டினை செயல்படுத்துவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.