அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறையினர் விரைவாகக் கண்டறிந்து மூன்று பேரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட பணம், பொருட்கள், 3 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு வழக்கில் 72 மணி நேரத்தில் மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளில் 24 மணி நேரத்திற்குள் மூன்று பேரை கைது செய்து, திருடப்பட்ட பணம், பொருட்கள் மற்றும் நகைகளை மீட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களின் பூட்டுகளை உடைத்து, மர்மநபர்கள் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து வணிகர்கள் அளித்த புகாரின் பேரில் அன்னூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் மேற்பார்வையில், அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்த தனிப்படையினர், 72 மணி நேரத்திற்குள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் பாண்டி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டதுடன், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி மாலை அன்னூர் நகரில் வேலை முடித்து வீட்டிற்கு நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றார். இதுகுறித்து அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்த தனிப்படையினர், 24 மணி நேரத்திற்குள் மதுரையைச் சேர்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட 3 பவுன் தங்கச் சங்கிலி முழுமையாக மீட்கப்பட்டு, உரிய நடைமுறைகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அபிஷேக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சொத்துக் குற்றங்களை தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் விரைவாகக் கண்டறிந்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளை கோவை மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...