கோவை: கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற உழைத்த கோவை ராமநாதபுரம் காவலர்களுக்கு காவல் ஆய்வாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை: கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற உழைத்த கோவை ராமநாதபுரம் காவலர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
அதேபோல, கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி என பல துறைகள் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக, நோய் பரவலைத் தடுக்கும் வகையில் கோவை ராமநாதபுரம் காவல் எல்லையில் தொடர்ந்து வாகன சோதனை மற்றும் பல்வேறு நூதன விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. இதனால் இந்த பகுதியில் நோய் பரவல் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இங்கு ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்த நபர்களின் 552 இருசக்கர வாகனமும், 12-மூன்று சக்கர வாகனமும், 10 நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் சமூக ஆர்வலர்கள் துணையுடன் ஏழை எளியோர் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்.

இப்படி நடைபெற்ற தொடர் நடவடிக்கையால் ராமநாதபுரம் காவல் எல்லை நோய்த்தொற்று இல்லாத பகுதியாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆய்வாளர் முருகேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அதேபோல, இரவு பகல் பாராமல் உழைத்த காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கோவையில் தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்தால் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருந்த அனைத்து தடுப்புகளும் (கண்டைன்மெண்ட் ஜோன்) நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பொதுமக்களில் ஒருவரான மாரிமுத்து கூறும்போது;-
கொரோனோ நோய்த்தொற்று பரவாமல் இருக்க ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதேபோல போலீசார் தினமும் ஒரு நாளைக்கு 500 பேருக்கு முக கவசம் வழங்கினர். மேலும் ராமநாதபுரம் 80அடி ரோட்டில் வசித்து வரும் வட மாநில தொழிலாளர்கள் , தர்மபுரி கட்டடத் தொழிலாளர்கள் என ஏழை எளியோருக்கு ராமநாதபுரம் காவல் நிலையம் சார்பில் தினமும் ஆயிரம் உணவுகள் வழங்கப்பட்டது. அதேபோல வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் தனிமனித இடைவெளியுடன் நடைபெற்றது. அதேபோல முதியோர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எல்லை முழுவதும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது .தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளில் இந்த எல்லையில் நோய் தொற்று பாதிப்பு இல்லை. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருவதால் காவல் ஆய்வாளரையும், அந்த காவலர்களையும் ராமநாதபுரம் எல்லை சார்பாக வாழ்த்துயுள்ளோம் என தெரிவித்தார்.