நீலகிரி: நீலகிரி எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி: நீலகிரி எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்றால் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லைகள் மூடிக் கிடக்கின்றன.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநில எல்லையான நாடுகாணி வழியாக ராஜஸ்தான் செல்ல 72 தொழிலாளர்கள் ஒரு லாரியில், கக்கனல்லா பகுதிக்கு வந்தனர். இவர்கள் சோதனைச்சாவடியில் இருந்து மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீண்டும் இதே சோதனை சாவடி வழியாக எட்டு பேர் குஜராத் செல்ல வந்தவர்களையும் காவல்துறையினர் கேரளாவிற்கு திருப்பி அனுப்பினர். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நாடுகாணி சென்று சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடிக்கு சென்று அங்கும் ஆய்வு மேற்கொண்டு எல்லைப் பகுதியில் அத்துமீறி யாரும் நுழையாமல் தீவிரமாக கண்காணிக்க காவல் துறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் கீதாராணி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.