கோவையில் கட்டுபாட்டை இழந்து வீட்டின் மீது லாரி மோதியதில் சுவர் இடிந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீட்டின் உரிமையாளர்!

கோவை: கோவையில் கட்டுபாட்டை இழந்து வீட்டின் மீது லாரி மோதி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீட்டின் முன் அமர்ந்திருந்த உரிமையாளர் உயிர் தப்பினார்.


கோவை: கோவையில் கட்டுபாட்டை இழந்து வீட்டின் மீது லாரி மோதி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீட்டின் முன் அமர்ந்திருந்த உரிமையாளர் உயிர் தப்பினார்.

கோவை அடுத்த கணுவாய் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இன்று காலை நாகராஜ் தன் வீட்டில் முன் அமர்ந்திருக்கும் போது அவ்வழியே செங்கற்களை ஏற்றி வந்த லாரி இயந்திர கோளாறு காரணமாக ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்தது.

இந்த நிலையில், தாறுமாறாக ஓடிய லாரி நாகராஜின் வீட்டின் முன் புற சுவரில் மோதியதில் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த நாகராஜ் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

லாரியின் ஓட்டுநர் மற்றும் அதில் வந்த வேலையாட்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த தடாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பழுதடைந்த நிலையில் இருந்த லாரியில் இருந்த செங்கற்களை மற்றொரு லாரிக்கு மாற்றும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...