கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டது - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் தற்போது எந்த விதமான கட்டுப்பாட்டு பகுதிகளும் இல்லை எனவும் 26 கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏற்கனவே 23 கட்டுப்பகுதிகளில் தளர்வு செய்யப்பட்டு இருந்தது. தற்போது மீதமிருந்த 3 கட்டுப்பாட்டு பகுதிகளும் தளர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் மாவட்டத்தில் ஒரு கொரொனா பாதிப்பு நோயாளியும் இல்லை எனவும் தெரிவித்தார்.

கோவையில் 146 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 14 நாட்களாக மாவட்டத்தில் எந்தவொரு புதிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தொடர்ந்து ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோவையில் மாவட்டத்தில் மத்திய குழு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கொரோனா சமூக பரவல் குறித்து பொதுமக்களிடம் பரிசோதனை செய்து மாதிரிகளை எடுத்து வருகின்றனர். மேலும், விரைவில் மத்திய அரசு கோவை மாவட்டத்தை பச்சை மண்டலமாக அறிவிக்கும் என்றார். தற்போது கோவை ஆரஞ்சு மண்டலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...