திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சி - போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் - கொடிகம்பம் பகுதியில் டாடா இண்டிகேஷ் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் இரண்டு பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன.



இந்த நிலையில், இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற போது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பது கண்டு திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்த போது அதில் ஒரு இயந்திரம் கம்பியை கொண்டு உடைக்க முயற்சித்திருப்பது தெரிய வந்தது. ஆனால் பணம் எதுவும் திருடு போகவில்லை. மேலும் அருகில் இருந்த ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது. போலீசார் அங்கும் ஆய்வு செய்தனர். அதில் எதுவும் கொள்ளை முயற்சி நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர்.

ஏடிஎம் மையங்கள் அருகே டாஸ்மாக் கடை உள்ளதால் மதுபோதையில் மர்மநபர்கள் எதுவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனரா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...