கூடலூர் நகரை ஒட்டிய பகுதிகளில் நடமாடும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்..!

நீலகிரி: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தோட்டமூலா ஏழு முறம் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை நேரத்தில் வந்த யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நீலகிரி: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தோட்டமூலா ஏழு முறம் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை நேரத்தில் வந்த யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



காலை 7 மணியளவில் வந்த இந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டிய போது குடியிருப்பு பகுதிகளை ஒட்டி ஓடியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த தினேஷ் என்பவரது கார் ஒன்றையும் யானை லேசாக சேதப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வருட காலமாக இடது பின்புற பகுதியில் காயத்துடன் திரியும் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ள நிலையில், தற்போது கடந்த சில மாத காலமாக இப்பகுதிகளை ஒட்டி நடமாடி வருகின்றது. அதிகாலை நேரங்களில் அவ்வப்போது வரும் இந்த யானையால் இப்பகுதிகளில் வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், காலை நேரங்களில் நடைபயிற்சி செல்லும் சிலர் யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளனர். அடிக்கடி ஊருக்குள் வந்து பழகிவிட்ட இந்த காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வருவதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக இந்த யானைபை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். அல்லது மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...