கோவை: கோவை மீன்கடை ஒன்றில் விற்பனைக்கு வந்த 57 கிலோ எடை கொண்ட மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகின்றனர்.
கோவை: கோவை மீன்கடை ஒன்றில் விற்பனைக்கு வந்த 57 கிலோ எடை கொண்ட மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகின்றனர்.
கோவையில் ஊரடங்கு தளர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் கடைகளில் வியாபாரம் விறு விறுப்படைந்து வருகின்றது. குறிப்பாக மீன்கடைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து மீன்கள் வரத்தும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஏற்றுமதிக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் அந்த வகை மீன்களும் கோவைக்கு விற்பனைக்கு வருகின்றது.
இந்த நிலையில் இன்று கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள மீன் கடை ஒன்றில் "டைகர் பிஷ்" எனப்படும் வகையை சேர்ந்த ஏற்றுமதி அதிகம் செய்யப்படும் மீன் இன்று விற்பனைக்கு வந்தது.
57 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட இந்த மீனை வழக்கமாக தங்களது கடைக்கு மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதாக தெரிவித்த கடை உரிமையாளர் கபீர், வழக்கமாக வஞ்சிரம், வாவல் போன்ற மீன் வகைகள் விற்பனைக்கு வரும் எனவும் தற்போது ஏற்றுமதி இல்லாததால் இந்த மீன் இங்கு விற்பனைக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.