கோவையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கோவையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து அனைத்தும் இயக்க தமிழக அரசு தடை விதித்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆட்டோக்கள் இயங்காத காரணமாக இதை நம்பி வாழும் பெரும்பாலான குடும்பங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதால் அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதால் வரும் 18ம் தேதி முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் தலைவர் சுகுமாரன் கூறுகையில், ஆட்டோக்கள் இயக்க இதுவரை ஐந்து முறை மனு அளிக்கப்பட்டு உள்ளது எனவும் எங்களது கோரிக்கையை அரசு செவி சாய்க்க வேண்டும் என்றார்.

மேலும், இந்த தொழிலை நம்பி கோவை மாவட்டத்தில் 15,000 மேற்பட்டோர் உள்ளதாக தெரிவித்த அவர், நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 300 பேருக்கு மட்டுமே உதவி தொகை கிடைக்க பெற்று உள்ளதாகவும் அதுவும் முழுமையாக கிடைக்க பெறவில்லை என்று கூறினார்.

எனவே, அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் எனவும் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மட்டுமே பேட்ஜ் வழங்கப்படுவதால் எழுபது சதவீத ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேட்ஜ் இல்லாத காரணத்தால் நலவாரியத்தில் உறுப்பினர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...