கேரளாவில் இருந்து பணிக்கு திரும்பும் ஊழியர்களை மருத்துவ பரிசோதனை செய்து தனிமைபடுத்த வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர் கோவை ஆட்சியரிடம் மனு!

கோவை: கேரளாவில் இருந்து பணிக்கு திரும்பும் ஊழியர்களை மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கேரளாவில் இருந்து பணிக்கு திரும்பும் ஊழியர்களை மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களை பணிக்கு அழைத்து வர கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து இருந்து கோவைக்கு ஊழியர் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகின்றது.



இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் கேரளாவில் இருந்து ரயிலில் வரும் அனைத்து கேரள மாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கும் முழுமையான கொரோனா பரிசோதனை செய்து அவர்களை பதினைந்து நாட்கள் தனிமைபடுத்தி பின்னர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

கேரளாவில் இருந்து வருவதால் ரயில்வே ஊழியர்களுக்கு முழுபரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும், ஆனால் அதை செய்யும் திட்டத்தில் தமிழக அரசும், சேலம் ரயில்வே கோட்டமும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வில்லை எனில் மீண்டும் கோவையில் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், தமிழக அரசு இதில் தலையிட்டு கேரளாவில் கோவைக்கு வரும் ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் சோதனை நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...