நீலகிரி: குன்னூரில் மின்வாரிய ஊழியர் எட்வின் சுரேஸ் வெள்ளிக் கிழமை மின் கம்பத்தில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒட்டுப்பட்டரைப் பகுதியை சேர்ந்தவர் எட்வின் சுரேஷ் குன்னூர் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார், இவர் வெள்ளிக் கிழமை ஆழ்வார்பேட்டை பகுதியில் மின்தடை ஏற்பட்ட காரணத்தால் அதனை சரிசெய்ய மின் பணியாளர் எட்வின் சுரேஷ் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய முற்பட்டார்.
அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து மேல் குன்னூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேல் குன்னூர் காவல் ஆய்வாளர் ஜெய முருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.