கோவையில் கல்லூரி மாணவனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து காவலரிடம் போலீசார் விசாரணை

கோவை: கோவையில் கல்லூரி மாணவனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து காவலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து காவலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போத்தனூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் அய்யலு கணேஷ். இவர் சுண்டக்காமுத்தூரில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக பேரூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு போதைக்கு அடிமையான தனியார் கல்லூரி மாணவன் கஞ்சா வாங்க சென்ற போது அய்யலு கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்து 45,000 பணத்தை பறித்ததாகவும் மேலும் ஒரு லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவன் தனது பெற்றோரிடம் கூறி உள்ளான். இதனையடுத்து அவர்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து காவலர் அய்யலு கணேஷ் மற்றும் 6 பேரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

இதில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் மூவர் தலைமறைவாகி உள்ளனர். பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுவது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...