கோவையில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு

கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டது.


கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் போலீசார் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இரு காவல் நிலையங்களும் மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த இரு காவல் நிலையங்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்பட்டது. தற்காலிகமாக மாற்றப்பட்டு இருந்த போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பணிபுரியும் போலீசார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்றி வருகின்றனர். புகார் அளிக்க வரும் நபர்களும் முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் பயன்படுத்தி பாதுகாப்புடன் காவல் நிலையத்திற்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...