நீலகிரி: உதகையில் தனியாரிடம் பணி செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் கூலி தொகையை அதிகப்படுத்தி தர வேண்டுமெனவும் தவறும்பட்சத்தில் வரும் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உதகையில் தனியார் மூலம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு நாளொன்றுக்கு தற்போது 420 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை 800 ரூபாயாக வழங்க வேண்டும் என கூறினர்.
தற்பொழுது கொரோனா நோய் தொற்றால் நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது மிகவும் சிரமத்துடன் செய்து வருவதாகவும் இதை கருத்தில் கொண்டு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களின் இன்னலை புரிந்து தினக்கூலியை அதிகப்படுத்தி தரவேண்டுமென தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், தனியாரில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தின கூலியை அதிகப்படுத்தி தராத பட்சத்தில் எதிர்வரும் 26ம் தேதி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.