கோவை: கோவை மண்டலத்தில் நேற்று(மே 7) ஒரே நாளில் மட்டும், மதுக் கடைகளில், 39 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.
கோவை: கோவை மண்டலத்தில் நேற்று(மே 7) ஒரே நாளில் மட்டும், மதுக் கடைகளில், 39 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.
ஊரடங்கு காரணமாக, மார்ச், 25 முதல், தமிழகத்தில் மதுக் கடைகள் மூடப்பட்டன. மத்திய அரசு, வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஊரடங்கை தளர்த்த அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில், சென்னை உட்பட, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், நேற்று மதுக் கடைகள் திறக்கப்பட்டன. வரிசையில் வந்தவர்களிடம், 'ஆதார்' எண்ணை பெற்ற ஊழியர்கள், 'டோக்கன்' வழங்கி, மது வாங்க அனுமதித்தனர்.
அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 170 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகியுள்ளன.
இதில், கோவை மண்டலத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 39 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 125 ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மட்டும் 16 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 915 ரூபாய்க்கு மது விற்பனையும், திருப்பூர் 11 கோடியே 86 லட்சத்து 41 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், ஈரோடு மாவட்டத்தில் 8 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 870 ரூபாய்க்கும், நீலகிரி மாவட்டத்தில் 2 கோடியே 88 லட்சத்து 61 ஆயிரத்து 420 ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.