கோவை: கோவையில் மது போதையில் காதலை கிண்டல் செய்த நண்பனை டம்பிள்ஸ் மூலம் தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் மது போதையில் காதலை கிண்டல் செய்த நண்பனை டம்பிள்ஸ் மூலம் தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(20). கோவை கணபதி கே.ஆர்.ஜி நகர் பகுதியில் தங்கியுள்ள இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். பாலத்துறை பகுதியை சேர்ந்த இவரது நண்பர் மணிகண்டன் (23). கார் மெக்கானிக்காக பணி செய்து வருகிறார்.

சிவக்குமார் ஒரு பெண்னை காதலித்து வந்த நிலையில் அவரது நினைவாக தனது கையில் பிளேடால் கழித்துள்ளார். அதே அறையில் தங்கியிருந்த மணிகண்டன் சிவக்குமாரின் இந்த செயலை கிண்டல் செய்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து, மணிகண்டன் உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் டம்பிள்ஸ் கொண்டு சிவக்குமாரின் தலையில் தாக்கியதில் அவர் மரணமடைந்து உள்ளார்.
இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும் தனது காதலை கிண்டல் செய்த காரணத்தால் சிவக்குமாரை மணிகண்டன் கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த சரவணப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.