கோவையில் மதுபோதையில் காதலை கிண்டல் செய்த நண்பன் டம்பிள்ஸால் தலையில் அடித்து கொலை..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் மது போதையில் காதலை கிண்டல் செய்த நண்பனை டம்பிள்ஸ் மூலம் தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மது போதையில் காதலை கிண்டல் செய்த நண்பனை டம்பிள்ஸ் மூலம் தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(20). கோவை கணபதி கே.ஆர்.ஜி நகர் பகுதியில் தங்கியுள்ள இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். பாலத்துறை பகுதியை சேர்ந்த இவரது நண்பர் மணிகண்டன் (23). கார் மெக்கானிக்காக பணி செய்து வருகிறார்.



சிவக்குமார் ஒரு பெண்னை காதலித்து வந்த நிலையில் அவரது நினைவாக தனது கையில் பிளேடால் கழித்துள்ளார். அதே அறையில் தங்கியிருந்த மணிகண்டன் சிவக்குமாரின் இந்த செயலை கிண்டல் செய்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, மணிகண்டன் உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் டம்பிள்ஸ் கொண்டு சிவக்குமாரின் தலையில் தாக்கியதில் அவர் மரணமடைந்து உள்ளார்.

இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும் தனது காதலை கிண்டல் செய்த காரணத்தால் சிவக்குமாரை மணிகண்டன் கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த சரவணப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...