கோவையில் இஸ்லாமியர்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகம் செய்த திமுக வார்டு செயலாளர் மீது இந்து முன்னணியினர் தாக்கியதாக குற்றச்சாட்டு

கோவை: கோவையில் தங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்ததற்காக இந்து முன்னணியினர் தாக்கியதாக திமுக வார்டு செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: கோவையில் தங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்ததற்காக இந்து முன்னணியினர் தாக்கியதாக திமுக வார்டு செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் செல்வபுரத்தில் திமுகவின் 77வது வார்டு செயலாளராக உள்ள மதியழகன் (56), கொரோனா நிவாரணப் பொருட்களை விநியோகித்ததற்காக அவரது வீட்டில் நேற்று மாலை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 10 பேர் கொண்ட கும்பல் அவரது மகன் மனோஜ் குமார் (30) மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மதியழகன் தெரிவிக்கையில், இந்த திட்டத்தின் கீழ் திமுக அறிவித்த எண்ணுக்கு அழைப்பு விடுத்த மக்களுக்கு மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

"திமுக தலைமையகத்திலிருந்து தங்களுக்கு வழங்கப்பட்ட 30 பேர் பட்டியலை கொண்டு 77வது வார்டில் நிவாரண பொருட்கள் விநியோகம் செய்து வந்ததாகவும் அதில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்று கூறிய அவர், இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவா குழுக்களைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னையும் தனது மகனையும் கடுமையாக தாக்கியதால் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

மேலும், மதத்தின் அடிப்படையில் நிவாரணம் வழங்காமல், இந்த திட்டத்தின் மூலம் உதவிக்கு திமுகவை அணுகிய அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால், தங்கள் மீது தாக்குதல் நடத்தி மத சாயம் சேர்ப்பதாக திமுக வார்டு செயலாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...