திருப்பூரில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்பராயன் எம்பி கருப்பு சட்டை அணிந்து தர்ணா!

கோவை: கோவையில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்ற தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை அடுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டன.



இந்நிலையில், ஊரடங்கு முடிவதற்கு முன்பாக மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கருப்பு சட்டை அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் திமுக மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...