நீலகிரி: குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் நாய், காட்டு பன்றி, பூனை மற்றும் காக்கைகள் உள்ளிட்டவை இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி: குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் நாய், காட்டு பன்றி, பூனை மற்றும் காக்கைகள் உள்ளிட்டவை இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட நாய்கள், ஒரு காட்டுப்பன்றி, ஒரு பூனை மற்றும் 10க்கும் மேற்பட்ட காக்கைகள் தேயிலை தோட்டங்களுக்கு இடையே மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்த இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ துறை மண்டல இணை இயக்குனர் விடியப்பன் மற்றும் கால் நடை மருத்துவர் ராஜ முரளி ஆகியோர் இறந்த உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த பகுதியை சுற்றிலும் வனப்பகுதிகள் நிறைந்துள்ளதால் வனவிலங்குகள் ஏதாவது இறந்துள்ளதா? என்று அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சிக்கன் கழிவுகளில், புற்களை அழிக்கும் விஷ மருந்து கலந்திருந்ததை இவை உண்டதால் இறந்திருக்கக் கூடும் என்று தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.